• Welcome to TamilsGuide
செய்திகள் 1

One Last Time - மறைந்த அசாம் பாடகர் சுபின் கார்க் நடித்த கடைசி படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு

மறைந்த அசாம் பாடகரும் இசையமைப்பாளருமான சுபீன் கார்க் நடித்த கடைசி படமான 'ராய் ராய் பியன்னாலே' வெளியாகியுள்ளது.

அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் சுபீன் கார்க்.

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த 'ராய் ராய் பியன்னாலே' படம் நேற்று வெளியாகிய நிலையில் முதல் நாளிலேயே அசாமிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகவும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் படம் திரையிடப்பட்டு வருவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் கதயநாயனான சுபீன், பார்வையற்றவராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அசாமில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற பைமோன் டா, ரகுபதி மற்றும் பிதுர்பாய் போன்ற படங்கள் சுமார் ரூ.13 கோடி மட்டுமே வசூலித்துள்ளன.

செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. 
 

Leave a Reply