• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக பில்லியனர்கள் பட்டியலில் சமநிலையில் ரஷ்யா-பிரித்தானியா

உலக பில்லியனர்கள் பட்டியலில் ரஷ்யா மற்றும் பிரித்தானியா சமநிலைக்கு வந்துள்ளன.

அல்ட்ராடா (Altrata) நிறுவனத்தின் 2025 பில்லியனர்கள் கணக்கெடுப்பின்படி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா தற்போது ஒரே எண்ணிக்கையிலான பில்லியனர்களை கொண்டுள்ளன.

இரு நாடுகளும் தலா 128 பில்லியனர்களுடன் உலக அளவில் நான்காவது இடத்தை பகிர்ந்துள்ளன.

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக ஏற்பட்ட தனிமைப்படுத்தலையும் மீறி, ரஷ்ய பில்லியனர்களின் எண்ணிக்கை 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய பில்லியனர்களின் மொத்த செல்வம் 457 பில்லியன் டொலராகும், இது பிரித்தானியாவின் 323 பில்லியன் டொலரை விட அதிகம்.

உலகளவில், பில்லியனர்களின் எண்ணிக்கை 2024-ல் 5.6 சதவீதம் உயர்ந்து 3,508 ஆகவும், மொத்த செல்வம் 10.3 சதவீதம் உயர்ந்து 13.4 டிரில்லியன் டொலராகவும் வளர்ந்துள்ளது.

அல்ட்ராடா நிறுவனத்தின் CEO பிரையன் ஆல்ஸ்டர் கூறுகையில், பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, 1 பில்லியன் டொலர் வரம்பில் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து விரைவில் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தரவுகள், பில்லியனர்களின் சொத்துகள், வணிகத் தொடர்புகள், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் சமூக வலையமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.

இந்த வளர்ச்சி, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களை பிரதிபலிக்கிறது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
 

Leave a Reply