• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வரலாற்று பொருட்கள்

பிரித்தானியாவில் இந்திய வரலாற்று பொருட்கள் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. 

பிரித்தானியாவில் லண்டன் நகரில் நடைபெற்ற Sotheby’s ஏலத்தில், இந்திய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் அதிக விலையில் விற்பனையாகின. 

18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைசூர் அரசர் டிப்பு சுல்தானுக்காக தயாரிக்கப்பட்ட வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட 2 பிஸ்டல்கள், வழக்கமான மதிப்பீட்டை விட 14 மடங்கு அதிகமாக, 1.1 மில்லியன் பவுண்டுக்கு ஒரு தனியார் சேகரிப்பாளரால் வாங்கப்பட்டன.

அதே ஏலத்தில், 19-ஆம் நூற்றாண்டு சிக்குப் பேரரசின் நிறுவனர் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் பசாரில் யானையில் ஊர்வலமாக செல்வதை விவரிக்கும் பிஷன் சிங்க் என்பவரின் ஓவியம், 952,500 பவுண்டுகளுக்கு ஒரு நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

இது சிக்குக் கலை வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஓவியம், மஹாராஜாவின் அரசவைக் கூட்டம், அவரது மகன் ஷேர் சிங், ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் செயல்பாடுகளை நுணுக்கமாகக் காட்டுகிற ஓவியமாகும்.

மேலும், டிப்பு சுல்தானுக்காக உருவாக்கப்பட்ட மற்றொரு வெள்ளி அலங்கரிக்கப்பட்ட புக்மார் துப்பாக்கி 571,500 பவுண்டுக்கு விற்பனையாகியது.

முகலாய பேரரசர் அக்பரின் நூலகத்தில் இருந்த 16-ஆம் நூற்றாண்டு குர்ஆன் பிரதியும் 863,600 பவுண்டுக்கு விற்பனையாகியது.

இந்த ஏலத்தில் இந்திய வரலாற்று கலைப் பொருட்கள் 10 மில்லியன் பவுண்டுக்கும் மேல் வருமானத்தை ஈட்டியுள்ளன.

25 நாடுகளில் இருந்து ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்ற இந்த ஏலம், இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய மதிப்பை வெளிப்படுத்துகிறது. 
 

Leave a Reply