மோகன் ராஜா இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி - அனுஷ்கா பாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா
சினிமா
அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான 'அருந்ததி' திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அன்றைய காலகட்டத்திலேயே இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஒன்னிலையில் 'அருந்ததி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் அருந்ததியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும், 2026 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.























