தலைவரின் அன்புக்கு நன்றி!- ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி
சினிமா
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இதுமட்டுமில்லாமல் ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர் இவர். இதனால் சினிமாவையும் தாண்டி பல லட்சம் பேர் அவரது ரசிகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், இன்று தனது 49-வது பிறந்தநாளை லாகவா ரான்ஸ் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராகவா லாரன்ஸூக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு நன்றி தெரிவித்து ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவரின் அன்புக்கு நன்றி!"
இன்று தலைவர் எனது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக்கினார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதிகாலையில் எனக்கு இனிமையான வாழ்த்துகளை அனுப்பினார். அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே எனது நாளையே மாற்றியது! அவரது அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று கூறியுள்ளார்.























