• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுப்பு

இலங்கை

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று திறந்து வைத்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் பேருந்து தரிப்பிடமும் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள சுமார் 1000 மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோமாரி மக்கள் தமது குடிநீருக்கான வசதிகளை செய்து தருமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறிப்பாக நீண்டகாலமாக குடிநீர் இன்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற களுகொள்ள பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலட்சம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் அந்த பகுதியில் பேருந்து தரிப்பிடமும் இந்திய மக்களின் நிதி பங்களிப்புடன் தறிந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, 30 ஆம் திகதிவரை இந்திய உயர் ஸ்தானிகர் வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

இது மாகாணத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது, ​​ இலங்கையின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வும் உயர் ஸ்தானிகர் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலைகளுக்கான தளபாடங்களை வைபவ ரீதியாக கையளித்து வைத்தார்.

இந்திய அரசாங்கம் இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 33 ற்கும் மேற்பட்ட

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா 2.37 பில்லியன் நிதி உதவி வழங்கி உள்ளது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம் .ஏ .எம் .தாஹிர் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .சஹதுல் நஜீம் பிரதி கல்வி பணிப்பாளர் யூ .எல் .எம். சாஜித் நிந்தவூர் கோட்ட கல்வி பணிப்பாளர் எம் எல் எம் முதாரிஸ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply