• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்

இலங்கை

புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். 

சம்பவம் தொட்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply