செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி கிடைத்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தச் சட்டத்தரணி நேற்று (28) இரவு கடவத்தை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.























