டிரம்புக்கு நோபல் பரிசை பரிந்துரைப்பதாக கூறிய ஜப்பானின் புதிய பிரதமர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்போவதாக, ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி கூறியுள்ளார்.
தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப்பிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் திங்கள்கிழமை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ஜப்பானும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.























