• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம்

சினிமா

புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த காலத்தில் தி.மு.க என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும் அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர். அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்க செல்வார்கள். அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியப்பட செய்துவிடுவார். அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள்.

இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது . இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர். பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார், அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து புரட்சித்தலைவர்க்கு எந்தவித தகவலும் சொல்லாமல் திடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிரமாண்டமான ஊர்வலமாக சென்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவருக்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார். உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர். அங்கே சென்றவர்கள் மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்திருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறப்பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர் தான் நீங்கள் வருவீர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல் தவித்தனர் .

கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில் ஆயிரம் பேர் என்பது குறைவு, அடுத்த முறை இருபதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணுக்கு தெரியலை வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன், உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும். முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார் புரட்சித்தலைவர்.

பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்.

Paranji Sankar

Leave a Reply