Tobey Maguire நடிக்கும் ஸ்பைடர் மேன் 4 படத்தின் அப்டேட்
சினிமா
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர் மேன் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது. இதனை தொடர்ந்து அதன் 2 மற்றும் 3 ஆம் பாகங்கள் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டன.
ஸ்பைடர் மேன் 3 ஆம் பாகத்தில் பழைய ஸ்பைடர் மேன் படங்களில் நடித்த டோபே மெக்யூர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், டோபே மெக்யூர் நடிப்பில் மீண்டும் ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது. இது டோபே மெக்யூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பேட்மேன் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் மேட்சன் டாம்லின், "நிதானமாக சென்றால் வெற்றி கிடைக்கும். அதைப் பற்றி நீண்ட காலத்திற்கு எதுவும் சொல்ல முடியாது, ஏனென்றால் இது நிறைய நபர்களையும் அரசியலையும் உள்ளடக்கியது.
ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் கதையை எழுத நான் ஆர்வமாக உள்ளேன். அதில் ஸ்பைடர் மேனாக நடிக்கும் டோபே ஒரு கணவனாகவும் தந்தையாகவும் நடிப்பார் என்று தெரிவித்தார்.
























