இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள்
இலங்கை
2023 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) இரண்டு புதிய துணை ஆளுநர்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இந்த இரண்டு பெயர்களும் மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உதவி ஆளுநரான முனைவர் சி. அமரசேகர மற்றும் உதவி ஆளுநரான திரு. கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோரை முறையே 2025.10.24 மற்றும் 2025.11.03 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






















