மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் மேல்முறையீடுகளை விசாரிக்க திகதி நிர்ணயம்
இலங்கை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (28) திகதி நிர்ணயித்தது.
அதன்படி, உயர் நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுக்களை 2026 ஜனவரி 20 அன்று விசாரிக்கும்.
மேல்முறையீட்டு மனுக்கள் இன்று தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தில், தற்போது காவலில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






















