இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் திங்கள்கிழமை (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது,
இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) கூறியது.
இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:04 மணிக்கு 112. கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.























