• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈகுவடாரில் நீச்சல் குளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது. பின் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply