• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் எப்போதுமே தனது தோற்ற இமேஜுக்கு முக்கியத்தும் கொடுப்பவர்

சினிமா

எம்.ஜி.ஆர் எப்போதுமே தனது தோற்ற இமேஜுக்கு முக்கியத்தும் கொடுப்பவர். தூய வெண்ணிற ஆடை, கருப்பு கண்ணாடி, தலையில் வெள்ளை தொப்பி இல்லாமல் 3வது நபர் முன் தோன்ற மாட்டார்.

இளமை காலத்தில் அவருக்கு சுருள் சுருளாக முடியிருந்த காலத்தில் மேக்அப் கூட செய்யாமல் தான் வெளியில் வருவார்கள். ஆனால் வயது 50ஐ தாண்டியதும், முடி கொட்டத் தொடங்கியதும் தனது தோற்றத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நேரத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பிரச்சாரத்திற்காக எம்.ஜி.ஆரை மருத்துவனையில் உட்கார வைத்து. அவர் இருவிரல் காட்டுவதை போல் படம் எடுத்து அந்தப் படத்தை பயன்படுத்தினார்கள். அதில்கூட எம்.ஜி.ஆர் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார்.

அவர் கண்ணாடியும் அணியாமல், தொப்பியும் அணியாமல், எந்த மேக்அப்பும் பண்ணிக்கொள்ளாமல் ரொம்பவே கேசுவலாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

அது 1972ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது அவரது பாதுகாவலர்களாக இருந்த ஜேக்கப், ஜேசுதாஸ் என்ற இரு கான்ஸ்டபிள்களுடன் அவர் எடுத்துக் கொண்ட படம். தனது வீட்டு நீச்சல் குளத்தில் அதிகாலை நீச்சல் பயற்சியை முடித்து விட்டு ரிலாக்சாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட படம். பாதுகாவலர்களை சாதரண பணியாளர்களாக கருதும் தலைவர்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களை சகோதரனாக நேசித்த தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

- தினமலர் நாளிதழ்

Leave a Reply