யாழ்ப்பாணத்தைக் கண்டு துயரடையும் கவிப்பேரரசு வைரமுத்து
இலங்கை
யாழ்ப்பாணம் என்று நினைத்தாலே நெஞ்சில் ஒரு துயரமும், பரவசமும் கலந்து கலந்து வருகின்றது என்று தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் மில்லர் முழு நீளத் திரைப்படத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்றையதினம் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்தார்.
இதன்போது, ஊடகவியலாளரிடம் கருத்துத் தெரிவித்த வைரமுத்து,
"யாழ்ப்பாணம் என்றால் பரவசமும், துயரமும் கலந்து கலந்து வருகின்றது. இதனை என்னால் உணர முடிகின்றது. என் சொற்கள் கூட வழக்கமான சொற்களாக வெளிவர தயங்குகின்றன.
இதனை சொல்ல முடியாது.. உணரத்தான் முடியும். இந்த துயரத்தையும், பரவசத்தையும் சொற்களில், பாடல்களில், திரைப்பட வசனங்களில் உணர்த்துவதற்கு வாய்ப்பு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என குறிப்பிடுள்ளார்.























