இங்கிலாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு - நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் அச்சம்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. எனவே அந்தக் கட்டிடத்தின் இடிபாடுகள் இர்வெல் ஆற்றில் விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு வசிக்கும் மக்கள் பயங்கர அதிர்வை உணர்ந்தனர். இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக கருதி பீதியடைந்தனர்.























