ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த 20 நாடுகள் தீர்மானம்
இலங்கை
உக்ரைனுக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து, “ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலக சந்தையிலிருந்து நீக்க” உறுதியளித்துள்ளன.
இதன் மூலம் போரைக் கைவிட ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த முடிவு, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் லண்டனில் நடைபெற்ற கூட்டு ஆதரவாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டது.
இது குறித்து ஸ்டார்மர் கூறுகையில்,
நாங்கள் ரஷ்யாவின் போர் இயந்திரத்துக்கான நிதி ஆதாரங்களை நிறுத்திக்கொண்டு வருகின்றோம்.
புடின் அமைதிக்காக தீவிரம் காட்டவில்லை. எனவே இந்த ஆண்டு உக்ரைனுக்கு ஆதரவாக எங்கள் நடவடிக்கைகள் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.
அவர் மேலும், ரஷ்யாவின் உள்நாட்டு சொத்துக்களை இலக்காகக் கொண்டு, அவற்றை பயன்படுத்தி உக்ரைனின் பாதுகாப்புக்கு நிதி உதவியை வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.























