• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்னுமோர் உலகம் உண்டு . நான் கண்டது , நீ காணாதது

சினிமா

" யாரிவன் , எங்ருந்து வந்தான் , என்ன இவன் பழைய
கதை , ஏனிந்த நாடகம் ? என்றெல்லாம் குழம்பும்
உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப்
பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
கண்ணாடி உன் மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் . அரண்மனை , அதிகாரம் , ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும் உலகம் . இன்னுமோர் உலகம் உண்டு . நான் கண்டது , நீ
காணாதது .
காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் ,விதைப்பார்கள் , அறுப்பார்கள் , சுமப்பார்கள் . அனால் உண்ண மட்டும் உணவின்றித்
தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே
நானும் ஒருவன் . படையிலே சேர்ந்தேன் ; நாட்டைக்
காக்க , மக்களுக்கு பணி புரிய . சேர்ந்த பின்பே அறிந்தேன் . வாழ வைக்க வேண்டிய படை மக்களை
மாள வைத்தது ; ஆற்ற வைக்க வேண்டிய படை
மக்களை அழ வைத்தது . சண்டை வேண்டாம் , உணவு
வேண்டும் , வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள்
மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி ; அணைக்கத் தாவும் என் மனசாட்சி .
ஏனிப்படி , எதற்காக , நடக்கலாமா , சரிதானா
என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . படையிலிருந்து விலகினேன் . புரட்சிக் கூட்டத்திலே
புகுந்தேன் . புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது
ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல ; அதில்
எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நங்கள்
தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளையடிப்போம்
மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம்
அறிவுப் பொருள்களை . கத்தி எடுக்காத ,ரத்தம் சிந்தாத
அறிவுப் புரட்சி அது . பொல்லாமையைப் போக்கி
மக்கள் மனத்தை மாற்றியதைக் கொடுமை என்றது
உங்கள் அரசாட்சி .

பிடிபட்டேன் , உதை பட்டேன் , சிறையிலே வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே
இப்போது , அவன் சிறையிலே இருந்த போது , பாராளுவோர் தந்த பரிசு , சவுக்கடி , சூடு . பார் சகோதரி .
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி
உண்டு , ஏழை அதனினும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே என்று கேட்டதர்காகவா இந்த தண்டனை ?
பட்டேனே பல துயரம் , கெட்டேனா , பழி
காரனாக மாறினேனா ? இல்லை நான் பலனளிக்கும்
கருவியானேன் ! "

 

உரையாடல் : கண்ணதாசன் - ரவீந்தர் .

Leave a Reply