• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானியர்களுக்கு எதிராக வழக்கு

இஸ்ரேலுக்காகப் போராடிய பிரித்தானிய பிரஜைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு பாலஸ்தீன உரிமைகள் குழுவொன்று சட்டப்பூர்வ முயற்சியைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு பிரித்தானிய நபருக்கு எதிராக அழைப்பாணை அனுப்பக் கோரி கடந்த திங்கட்கிழமை ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தி கார்டியன் வியாழக்கிழமை (23) செய்தி வெளியிட்டுள்ளது. 

மிகவும் அசாதாரணமான இந்த வழக்கை பாலஸ்தீனியர்களுக்கான நீதிக்கான சர்வதேச மையம் (ICJP) தொடுத்துள்ளது.

பெயர் குறிப்பிடப்பட்ட பிரித்தானியர், இங்கிலாந்து பங்கெடுக்காத மோதலில், பாலஸ்தீனத்துக்கு எதிராக ஒரு வெளிநாட்டு இராணுவத்தில் இணைந்து போரிட்டதாகவும் பாலஸ்தீன உரிமைகள் குழு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகளுக்காகப் போராடிய நபர்கள், 1870 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் படையெடுப்புச் சட்டத்தின் பிரிவு 4ஐ மீறியதாகவும் குறித்த குழு வாதிடுகிறது.

இந்தச் சட்டம், இங்கிலாந்து அரசாங்கத்துடன் சமாதானமாக இருக்கும் மற்றொரு வெளிநாட்டு அரசுடன் போரில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டு அரசின் இராணுவ சேவையை ஏற்றுக்கொள்வதையோ அல்லது ஒப்புக்கொள்வதையோ தடை செய்கிறது.

சட்ட ஆவணங்கள் வழக்குத் தொடர முயற்சித்த ஒரு நபரை மட்டுமே அடையாளம் காட்டினாலும், இஸ்ரேலுக்காகப் போரில் பத்துக்கும் மேற்பட்ட பிரித்தானிய குடிமக்கள் பங்கெடுத்தமை தொடர்பான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாகக் பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச நீதி மையம் கூறுகிறது.

பிரித்தானிய அரசாங்கம் கடந்த செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக ஒரு நாடாக அங்கீகரித்த பாலஸ்தீனம், இங்கிலாந்துக்கு எதிராக எந்தப் போரிலும் இதுவரை ஈடுபட்டதில்லை. 

1948 வரை சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் பகுதி பிரித்தானிய காலனியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply