• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவினின் மாஸ்க் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கவினுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், மாஸ்க் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 21-ந் தேதி உலகளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply