ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன் அடங்கிவிட்டான் - வைரமுத்து இரங்கல்
சினிமா
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.
சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார். பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.
இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினரின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சபேஷின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேனிசைத் தென்றல்
தேவாவின் இளவல்
இசையமைப்பாளர்
சபேஷ் மறைவு
மனவலியைத் தருகிறது
கலையன்றி
வேறொன்றும் அறியாத
இசையே வாழ்வென்று வாழ்ந்த
ஒரு சகோதரர் சபேஷ்
அமைதியானவர்;
அவர் பேசியதைவிட
வாசித்ததே அதிகம்
அவரது மறைவு
தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல
வாசிக்கப்படும்
இசைக்கருவிகளுக்கெல்லாம்
இழப்பாகும்
ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்
அடங்கிவிட்டான்
அவரது ஆருயிர்
அமைதி பெறட்டும்
ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.























