வெனிசுலாவில் ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து 2 பேர் சாவு
வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் கருகி பலியாகினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






















