சீதா ராமம் இயக்குநர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
சினிமா
சீதா ராமம் புகழ் ஹனு ராகவப்பு இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பிரபாஸ் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அதன்படி, இன்று வெளியான டைட்டில் போஸ்டரில் இப்படத்திற்கு Fauzi என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. டைட்டில் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















