நடிகை மனோரமாவின் மகன் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
சினிமா
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகை மனோரமா. "ஆச்சி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறார்.
ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த மனோரமாவின் மகனான பூபதி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பூபதி கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன்பின் சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பூபதியின் மறைவுக்கு திரையுலங்கினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பூபதிக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை கண்ணம்மாபேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.























