யாழில் ஐஸ் போதைப்பொருள், வாள் என்பவற்றுடன் இருவர் கைது
இலங்கை
யாழ்ப்பாணத்தில் 20கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திச்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 20கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகேநபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும் அவரிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது .
மேலதிக விசாரணையை யாழ் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
























