• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுப்பு மாதிரி கொதித்த 1.75 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் மெத்தை - தூங்க முடியாமல் தவித்த பயனர்கள்

நேற்று முன் தினம், உலக அளவில் அமேசான் வெப் சர்விசஸ் (AWS) சர்வர் தொழில்நுட்பம் பாதிப்புக்குள்ளானது.

இதனால் AWSஐ சார்ந்து இயங்கும் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்களும் இதனால் பாதிக்கப்பட்டன. சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது. அதிக வெப்பத்தில் தூங்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சில பயனாளர்கள் பதிவிட்டனர்.

இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார். எதிர்காலத்தில் ஆஃப்லைனிலும் கட்டில்கள் இயங்கும் வண்ணம் உருவாக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply