• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஆட்சி காலத்தில் செய்த 10 விஷயங்கள்

சினிமா

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஆட்சி காலத்தில் செய்த 10 விஷயங்களை சொல்லு பார்ப்போம் என்றார்கள்... அந்த நண்பர்களுக்காக...

1) எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு, 1982ஆம் ஆண்டு நீதியரசர் எஸ்.மகாராஜன் தலைமையில், கோயில் அர்ச்சகர் நியமனமுறை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைகள் செய்வதற்கான ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் அறிக்கை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவான முக்கிய ஆவணமாக இருக்கிறது.
தந்தை பெரியாரின் 'நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முயன்றது தனயன் எம்.ஜி.ஆர் என்பதற்கு இது ஒரு சான்று.
2) ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட இடைநிலை சாதியை - குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்துவரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். இதன் மூலம், ஆயிரக்கணக்கான பட்டியலின மக்கள் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இதை செய்தார்.
3) வெகுமக்களுக்கு அரிசியை கொடுக்க "மூன்று படி இலட்சியம் - ஒரு படி நிச்சயம்" என்றார் பேரறிஞர் அண்ணா. அவர் வழியில் வந்த எம்.ஜி.ஆர், பகுதி நேர ரேஷன் கடைகளால் எழுந்த புகாரை சீர்செய்ய அரசு சார்பில் 22,000 முழு நேர ரேஷன் கடைகளை திறந்தார்.
4) படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையை முதலில் வழங்கியது எம்.ஜி.ஆர் அரசாங்கம்.
5) தந்தை பெரியாரும், குத்தூசி குருசாமி அவர்கள் முன்வைத்து எழுதி வந்த எழுத்து முறையை ஏற்று, தமிழ் எழுத்து சீர்திருத்தத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, தமிழின் இன்றைய இணைய வெளி வளர்ச்சிக்கான பங்களிப்பை செய்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. அந்த எழுத்துருக்களையே இன்று நீங்கள் படிக்கிறீர்கள். பெரியார் பொன்மொழிகள், அண்ணாவின் ஆர்ய மாயை நூல்களின் மீதான தடையை நீக்கினார்.
6) திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். அதற்கு அறிஞர் திருக்குறள் முனுசாமி அவர்களை தலைவராக நியமித்தார். திருவள்ளுவர்

திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
7) குறிப்பிட்ட சிலர் சம்பாதிக்க சுயநிதி கல்லூரிகள் & தனியார் நிறுவனங்கள் உருவாக துணை இருந்தார் என சிலர் சப்பை காரணங்கள் சொன்னாலும், அந்த
தனியார் நிறுவனங்களில் 50/50 இருக்கை இடங்களை அரசுக்கு உரித்தாக்கி, ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்க் கல்வி வாய்ப்பை அளிக்கும் சூழலை ஏற்படுத்தினார். விதிமுறைகள் விதித்து வழியேற்படுத்தினார்.
😎 தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்கள், எம்.ஜி.ஆர்., ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டன.
9) அன்றைய ஆந்திர முதல்வர் நந்தமுரி தாரக ராமராவுடனான தனது நட்புறவை பயன்படுத்தி, தெலுங்கு-கங்கை திட்டத்தை முன்மொழிந்து, உருவாக்கி, ஆந்திராவின் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார்.
அத்தியாவசிய குடிநீர் பிரச்னைகளை போக்க, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், செயற்கை மழைத் திட்டம், சிறுவாணி குடிநீர் திட்டம், சாயர்புரம் குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். (Siruvani Dam, constructed in 1984 is used for supplying drinking water to the city of Coimbatore in Tamil Nadu.) இதன் மூலம் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தினார்.
10) அண்ணா சொன்ன வழியில் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்க முனைந்த எம்.ஜி.ஆர், மாநில அரசாங்களுக்கு சம உரிமைகள் கோரி - தென்னக மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தி, தென்னகத்தின் பிரகடனத்தை முழங்கினார். பொதுத் தொகுப்பிலிருந்து அரிசிக்காக உண்ணாவிரதம் போன்றவை முக்கிய போராட்டங்களை முன்னெடுத்தார்.
11) தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
12) 'ஒரு குடிசை, ஒரு விளக்கு' திட்டம் கொண்டுவந்து ஏழை குடிசைகளில் ஒளியேற்றியது.
13) சத்துணவு திட்டம், மாணவர்கள் கல்வி பயிலாமல் இடையில் நிற்பதை தவிர்க்க 5ஆம் வகுப்புவரை ஆல் பாஸ் திட்டம், பி.யூ.சி முறையை ஒழித்து பள்ளியிலேயே 12ஆம் வகுப்புவரை படிக்கலாம் என மாற்றியது.
14) கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை எந்த அரசும் கொடுக்காத அளவுக்கு, OBC - 50%, SC/ST - 18% என 68% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.

 

இன்னும் எவ்ளோ இருக்கு....எம் தலைவரை வெல்ல யாரு அவர்தான் எம்.ஜி.ஆர்!

Leave a Reply