இரவு நேர தபால் ரயில்கள் இரத்து
இலங்கை
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இடையில் இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், பிற்பகல் 03.35 மணி கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, பிற்பகல் 08.30 மணி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, பிற்பகல் 03.00 மணி கண்டி முதல் கொழும்பு கோட்டை, பிற்பகல் 03.25 மணி கண்டி முதல் கொழும்பு கோட்டை, மாலை 5.00 மணி பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை (இரவு அஞ்சல்) ஆகிய ரயில் சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளன.























