• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைதி ஒப்பந்தத்தை மீறினால் மிக வேகமாக, கொடூரமான முடிவு - ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்னதிம், டிரம்ப் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி, காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் திட்டவட்டாக மறுத்துள்ளது.

இந்த நிலையில், அமைதி ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸின் முடிவு மிக வேகமாகவும், சீற்றத்துடனும், கொடூரமாகவும் இருக்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "நம்முடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தொடர்ந்து மோசமாக கடந்து கொண்டால், எனது வேண்டுகோளின்படி கடுமையான படையுடன் காசாவுக்கு சென்று ஹமாஸை அழிக்கும் வாய்ப்பை வரவேற்பதாக மத்திய கிழக்கிலும், அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள நம்முடைய தற்போது சிறந்த கூட்டாளிகள் வெளிப்படையாக, வலுவாக, மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் தெரிவித்தனர்.

நான் அந்த நாடுகளிடமும், இஸ்ரேலிடமும், இதுவரை இல்லை. ஹமாஸ் சரியானதை செய்வார்கள் என்று நம்புவதாக சொல்லியுள்ளேன். அவர்கள் கடைபிடிக்கவில்லை என்றால் ஹமாஸின் முடிவு விரைவாகவும், கொடூரமாகவும் இருக்கும். உதவிக்கு அழைத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Leave a Reply