ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?
சினிமா
எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.
‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழுவினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தலையிட
வேண்டிய அவசியம் இல்லை " என்றார் .
- இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் .






















