• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டு வானம் ஒரு சிறந்த படமாக இருக்கும் - விஷ்ணு விஷால்

சினிமா

கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராம் குமார் இயக்கத்தில் வெளியானது 'ராட்சசன்' திரைப்படம். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

சுமார் 7 வருடங்கள் கழித்து இயக்குனர் ராம் குமார் உடன் 'இரண்டு வானம்' படம் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். 150 நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'இரண்டு வானம்' படம் திரைக்கு வர தயாராக உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். 'இரண்டு வானம்' மிக நீளமான ப்ராஜெக்ட். இது தனக்கு மிகவும் விசேஷமான படமாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 'இரண்டு வானம்' வெளியாக வாய்ப்புள்ளதாகவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து 'கட்டா குஸ்தி 2', அருண்ராஜா காமராஜ் உடன் ஒரு படமும், பேச்சுலர் பட இயக்குநருடன் ஒரு படம், அடுத்து 25-வது படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்.

Leave a Reply