காந்தாரா சாப்டர் 1 மாபெரும் வெற்றி- ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி
சினிமா
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரத்தில் உள்ள ராமணதாசுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.
அவருக்கு அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.























