• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோபல் பரிசு கிடைக்காதது கவலையில்லை, உயிர்கள் தான் முக்கியம் - சமாளிக்கும் ட்ரம்ப்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலை தீர்ப்பது தனக்கு எளிது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட 8 உலகளாவிய போர்களை தீர்த்த தமக்கு இது பெரிய விடயம் அல்ல என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சினையைத் தீர்க்கும்போது, ​​அடுத்ததைத் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள்.

ஆனால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றார். இருந்தாலும் எனக்கு கவலையில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நோபல் பரிசை தாண்டி உயிர்களைக் காப்பாற்றுவதுதான் தனக்கு முக்கியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply