• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய வம்சாவளி பிரபலத்துக்கு முனைவர் பட்டம் வழங்கிய கனடா

கனடா

பல்கலை இந்திய வம்சாவளியினரான பிரபலம் ஒருவருக்கு கனடாவில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யூடியூபராக இருந்து தொலைக்காட்சி பிரபலமாக மாறியுள்ள லில்லி சிங் என்பவருக்குதான் அந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

லில்லி சிங்கின் பெற்றோரான சுக்விந்தர் சிங் மற்றும் மல்விந்தர் கௌர், இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

லில்லிக்கு யார்க் பல்கலை கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்ககவும், இசை மற்றும் பொழுதுபோக்குத்துறையில் அவரது சாதனைகளுக்காகவும் அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு இதே பல்கலையில் லில்லி உளவியல் துறையில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply