வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல் - இருவர் கைது
இலங்கை
வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தில் ஈடுபட்ட இருவர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கப்பபெற்ற தகவலின் பிரகாரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அழிவடையும்தன்மை கொண்ட பேனாமையினால் எழுதப்பட்ட 6 போலி அனுமதி பத்திரத்தை பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மண் அகழ்ந்து அதனை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில்p கண்டறியப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிசார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





















