கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா
இலங்கை
கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் பிரதம அதிதி கண்டி கல்வி வலய பணிப்பாளர் அந்தரகே, கண்டி கோட்ட கல்வி பணிப்பாளர் எஸ். தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
2025ஆம் ஆண்டுக்கான கலை விழா நிகழ்வில் கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
கண்டி கல்வி வலய பணிப்பாளர் , கோட்ட கல்வி பணிப்பாளர்களை பாடசாலை அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் மாலை அணிவித்து ஞாபக சின்னம் வழங்கி கெளரவித்தார்.
இந்த நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















