சரவெடி கொண்டாட்டம்- தீபாவளி முன்னிட்டு காந்தாரா சாப்டர்-1 டிரெய்லர் வெளியீடு
சினிமா
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பே காந்தாரா சாப்டர் 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புதிய டிரெயிலரை வெளியிட்டுள்ளது.
இந்த டிரெயிலர் ஜெட் வேகத்தில் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
























