ராணுவ மந்திரி சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் - அவசரமாக தரையிறக்கம்
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் ராணுவ மந்திரி பீட் ஹெக்செத்தும் கலந்துகொண்டார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.
இந்நிலையில், நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விமானி தெரிவித்தார்.
அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்த விமானம் இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் பீட் ஹெக்செத் உள்பட அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். விமானியின் சாமர்த்தியத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






















