அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்ட LIK படக்குழு
சினிமா
விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டூட்' படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து, Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை 'LIK' படக்குழு வெளியிட்டுள்ளது.






















