தீபாவளி ட்ரீட்டாக இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள்...
சினிமா
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
Mirage:
மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Mirage'. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளிவந்த இப்படம் நாளை சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
முதல் பக்கம்:
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் வெற்றி நடித்த படம் 'முதல் பக்கம்'. காவல் அதிகாரியாக கதாநாயகன் தொடர் கொலைகளை விசாரிக்கும் கதை. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில், நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தணல்:
'டிஎன்ஏ' படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா நடித்து வெளியான படம் 'தணல்'. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்து இருந்தார். ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது.
மாய புத்தகம்:
இயக்குநர் ராம ஜெயபிரகாஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், அபர்நதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மாய புத்தகம்'. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவான இப்படம் நாளை சிம்பிளிசௌத் ஓடிடியில் வெளியாக உள்ளது.
தண்டகாரண்யம்:
அதியர் ஆதிரை இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடித்து வெளியான படம் 'தண்டகாரண்யம்'. பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படம் கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை சிம்பிளிசௌத் ஓடிடியில் வெளியாக உள்ளது.
டியர் ஜீவா
'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் டி எஸ் கே கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'டியர் ஜீவா'. பிரகாஷ் வி. பாஸ்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் டி எஸ் கே, தீப்ஷிகா, மனிஷா ,கே பி வை யோகி, லொள்ளு சபா உதயா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இப்படம் நாளை தென்கொட்ட ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனிடையே 10-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.






















