நம்ம படமும் தீபாவளிக்கு வருகிறது என்பது சந்தோசமாக இருக்கிறது- பிரதீப் ரங்கநாதன்
சினிமா
புதுசா வருகிற படங்கள் எல்லாமே Gen Z-க்கு ஃபேவரைட்டாக இருக்கும் ஹீரோக்களின் படமாக ரிலீஸ் ஆகிறது. முழுக்க முழுக்க இந்த மோதலை (Clash) எப்படி பார்க்கிறீர்கள் என பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பிரதீப் ரங்கநாதன் "நான் இதை மோதமாக பார்க்கவில்லை. யாருக்கும் போட்டியில்லை. எல்லோரும் சேர்ந்து வருகிறோம். எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் படம் பார்க்கும்போது Clash., அந்த வகையில் படம் பார்த்துள்ளேன். படம் பண்ணும்போது மோதலாக தெரியவில்லை. ரொம்ப படம் தீபாவளிக்கு வருவதை பார்த்திருப்போம். நம்ம படமும் தீபாவளிக்கு வருகிறது என்பது சந்தோசமாக இருக்கிறது" என்றார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.






















