ReEdit-ங்கில் ரீரிலீஸ் ஆகும் சூர்யாவின் அஞ்சான் - திரைக்கு வரும் தேதி அறிவிப்பு
சினிமா
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.
'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.























