• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் - மெலோனி கொடுத்த Reaction வைரல்

அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார். காஸாவில் தற்போது அமைதியை கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டும்போது இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply