ஸ்டார்ஷிப் ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் பலவும் போட்டி போடுகின்றன. இதற்கு இணையாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கான போட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 11-வது சோதனை முயற்சியாக மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக அனுப்பியது. இது முன்பு போலவே 8 போலி செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. பின்னர் திட்டமிட்டபடி மெக்சிகோ வளைகுடாவில் நுழைந்து இந்திய பெருங்கடலில் விழுந்தது.























