சட்டதரணியை தாக்கி விளக்கமறியலில் இருந்து வெளிவந்த பொலிஸ் அதிகாரிக்கு அமோக வரவேற்ப்பு.
இலங்கை
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு இன்று பிணை வழங்கப்பட்டதை அடுத்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கல்கிசை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா ரூ. 200,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் ஒன்றை வெள்ளிக்கிழமை (10) நகர்த்துவது தொடர்பாக ஒரு வழக்கறிஞருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் விடுவிக்கப்பட்டபோது, ஒரு கூட்டம் அவரது வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவரை தோள்களில் தூக்கிச் சென்றனர்.
நேற்று நடைப்பெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலானதுடன், நீதியை அனைவருக்கும் சமமாக வழங்கவும் தனது கடமையை சரியாகவும் செய்துள்ளார் என சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபிள்க்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.





















