டாக்ஸிக் படப்பிடிப்பு தொடர்பாக வெளியான வீடியோ... வைரலாக்கும் யாஷ் ரசிகர்கள்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், "டாக்ஸிக்" திரைப்படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவில், மேல் சட்டை இல்லாமல் பால்கனியில் நின்று யாஷ் புகைப்பிடிப்பது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இப்படம் தொடர்பான எந்தவித காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ காட்சி படக்குழுவினரை கவலையடையச் செய்துள்ளது.
























