• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒக்டோபர் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை

2025 ஒக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபர் 8 முதல் 12 வரை 24,266 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை வந்துள்ளதாக SLTDA தரவு காட்டுகிறது.

இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

அந்த எண்ணிக்கை 18,299 ஆகும்.

அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து 5,417, சுற்றுலாப் பயணிகளும் இங்கிலாந்திலிருந்து 4,874, சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 3,804 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,954 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். 

அதேநேரம், ரஷ்யா, பங்களாதேஷ், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலிருந்தும் கணிசமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் மொத்தம் 1,788,235 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் SLTDA தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
 

Leave a Reply