• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவுறுத்தல்

இலங்கை

இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து வெளிநாட்டினரும் 2025 ஒக்டோபர் 15 முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்பு இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (eTA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க வெளிவிவகாரத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் கட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளது.

இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த போராட்டங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம்.

போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தலாம்.

எனவே, அமைதியான கூட்டங்கள் உட்பட அனைத்து கூட்டங்களையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply